உனக்குள் ஒரு ரகசியம் | குரு மித்ரேஷிவா | Hello Vikatan

By: குரு மித்ரேஷிவா | Hello Vikatan
  • Summary

  • ``தியானம் செய்வதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்'' என்று துறவியிடம் ஒருவர் கேட்டார். ‘‘ஒன்றுமில்லை'' என்று சொல்லிச் சிரித்தார் துறவி. ‘‘பிறகு இதை நீங்கள் செய்வதன் அர்த்தம் என்ன?'' என்று அவர் மீண்டும் குழப்பத்துடன் கேட்டார். ‘‘தியானத்தின் மூலம் நான் எதையெல்லாம் இழந்தேன் என்று அறிந்துகொள். கோபம், மன அழுத்தம், துயரம், உடல் உபாதைகள், முதுமை குறித்த மனச்சுமை, மரணம் குறித்த அச்சம்... எல்லாவற்றையும் இழந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்'' என்றார் துறவி.


    இப்படி ஒரு ஜென் கதை உண்டு. தங்கள் தொழிலை, பணியை, வியாபாரத்தை, தாங்கள் செய்யும் எதையும் ஒரு தியானம் போலக் கருதும் மனிதர்கள் மகிழ்ச்சியை அதிகம் பெறுகிறார்கள்.

    குரு மித்ரேஷிவா | Hello Vikatan
    Show More Show Less
Episodes
  • Guru Mithreshiva - சகுனம் பார்ப்பது சரியா? | EP - 17
    Nov 19 2024

    `மியாவ்' என மழலைக் குரலெழுப்பும் தன் குட்டியை வாயில் லாகவமாகக் கவ்விக்கொண்டு தாய்ப்பூனை நடந்து செல்லும்போது சிலர் அதன் தாய்மைப்பண்பை ரசிப்பார்கள். இன்னும் சிலரோ, ‘ஐயோ, பூனை குறுக்கே போய்விட்டதே' என்று பதறுவார்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றும் பலரிடம் இருக்கிறது. நல்ல நேரம் பார்த்தே செயலைத் தொடங்குவார்கள். அப்படிச் செய்தால் அது வெற்றியாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.
    என்னிடம் பலர், ‘‘குருஜி, சகுனம் பார்ப்பது சரியா, தவறா? ஒரு செயலைத் தொடங்கும்முன் சகுனம் பார்க்க வேண்டுமா?'' என்று கேட்பார்கள். முதலில் சகுனம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நம் தனிப்பட்ட விருப்பம், மற்றொன்று பிரபஞ்ச சக்தி.

    Show More Show Less
    12 mins
  • Guru Mithreshiva - சாகாத நிலைக்குச் செல்வது எப்படி? | Ep 16
    Aug 12 2024

    இப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மழை, வெள்ளம், புயல், சுனாமி என ஏதோ ஒன்று நிகழ்ந்து ஏராளமான பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகளைப் பார்த்தோம்... பேரிழப்பு.
    ‘‘குருஜி, இந்தப் பேரிடர்கள் எல்லாம் ஏன் நடக்கின்றன? இதை எப்படிப் புரிந்துகொள்வது?’' என்று என்னிடம் அநேகர் கேட்பதுண்டு. நிறைய பேர் இதைக் கடவுள் தரும் தண்டனை என்று நினைக்கிறார்கள்.
    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், ‘இயற்கையில் எதுவுமே தற்செயல் அல்ல' என்பதுதான். இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் தொடர்பு இருக்கிறது. இயற்கை நம்மைச் சார்ந்து இருக்கிறது. நாம் இயற்கையைச் சார்ந்து இருக்கிறோம். அதாவது இயற்கையின் படைப்புகளில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன (Interdependent).

    Show More Show Less
    16 mins
  • Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி? Ep 15
    Aug 12 2024

    `நல்லவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். ஆனால், கெட்டவர்கள் சுகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாக நடக்கிறது. ஏன் இப்படி இருக்கிறது குருஜி?'
    என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. உங்களுக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கலாம். ஒரு ரகசியம் சொல்கிறேன். இயற்கையில் நல்லவன், கெட்டவன் என்ற பேதமே இல்லை. உண்மையானவன், பொய்யானவன் என்றுதான் உள்ளது. ‘நல்லவனாக இரு' என்று வாழும் வழி சொல்கிறார்களே தவிர ‘உண்மையாக இரு’ என்று யாரும் சொல்லவேயில்லை.
    குழந்தைகள் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். நம் வீட்டில் எப்படி விளையாடி சேட்டை செய்து சந்தோஷமாக இருப்பார்களோ, அப்படித்தான் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் இருப்பார்கள். ஆனால் நாம் அதை அனுமதிப்பதில்லை. ‘இப்படியெல்லாம் சேட்டை பண்ணக்கூடாது. இதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்... பேசாமல் இரு' என்று கட்டுப்படுத்துவோம்.

    Show More Show Less
    21 mins

What listeners say about உனக்குள் ஒரு ரகசியம் | குரு மித்ரேஷிவா | Hello Vikatan

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.

In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.