Ungal Ennangal Tharum Abaara Vetri [The Tremendous Success that Your Thoughts Bring]
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $1.99
-
Narrated by:
-
Dr. Udhayasandron
About this listen
முழுமையாகப் படித்து முடிக்கும்பொழுது உங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்குமான பல வழிகள் நிச்சயம் புலப்படும். ஏனெனில், இது வெறும் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, நமது அன்றாட வாழ்வில் நாம் வெற்றிக்கான உத்திகளைக் கடைபிடித்து, ஓர் இனிய ஆரம்பத்தையும், அபார வெற்றியையும் தரப்போகும் புத்தகம் ஆகும்.
நான் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பகிர்ந்து கொண்ட, பயிற்சிகளில் பயன்படுத்திய, வெற்றி கண்ட யுக்திகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
‘மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது’. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிகரமான மனிதராக உங்களை உருவாக்கப் போவது உறுதி.
எண்ணங்கள் சீரானால் அனைத்தும் சீராகும்.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் – அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்றார் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆகவே, சொல்வது யார் என்பதைவிட, சொல்லப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையைக் காண்பதுதான் அறிவுடைமை ஆகும்.
திறந்த மனத்தோடு படியுங்கள்.
குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கதைப் புத்தகம் படிப்பதுபோல படிக்காமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் நேரம் ஒதுக்கி, ஆழ்ந்து படியுங்கள்.
இந்நூலில் உள்ள எண்ணங்களை உங்களின் எண்ணங்களோடு உரசிப் பாருங்கள்; உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். இவை வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள். இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ‘அபார வெற்றி’ கிடைப்பது உறுதி.
உங்கள் எண்ணங்களைப் பட்டைத் தீட்டி வாழ்வில் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பேரன்புடன்,
உதய சான்றோன்.
Please note: This audiobook is in Tamil.
©2010 Dr. Udhayasandron (P)2012 Pustaka Digital Media Pvt. Ltd.